(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பின்லாந்து நாடானது உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில், கடல் சோதனைகளுக்காக திறந்த நீரில் தனது முதல் பயணத்தை அக்கப்பல் மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்மு ஜனவரி மாதம் தனது முதலாவது பயணத்தை Royal Caribbean International’s Icon of the Seas ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த கப்பலானது 250,800 டொன் வரை சுமையை தாங்கக் கூடியது என்பதுடன், உலகின் மிகப்பெரிய நீர் பூங்காவையும் கொண்டுள்ளது. இதில் 5610 பயணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







