NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ள பியூமி ஹன்சமாலி!

தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி, அங்கிருந்து வெளியேறிச் சென்ற போது அவர் இதனை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

தம்மிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் வேறு ஓர் நாளில் விசாரணை நடத்தப்படும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து தாம் வரும் ஈட்டியதாகவும் வேறும் எந்தவொரு வியாபாரமும் தமக்கு கிடையாது எனவும் பியூமி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை உறுதி செய்யக்கூடிய பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்ட சுமார் 25,000 ஆவணங்களுடன் தாம் விசாரணைகளுக்கு முன்னிலையானதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ளதாக பியூமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles