NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் வெளியாகவுள்ள கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கான ஆயுர்வேத சட்டத்திருத்தம் கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அறிவிப்பின் மூலம் அதன் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles