பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்புப்பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி, தேங்காய் எண்ணெய், பச்சைப்பயறு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன்படி கடந்த வருடங்களில் 40 முதல் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட பலலகார வகைகளின் விலை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.