(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 3 சதவீதம் மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரப்படி மின்சாரக் கட்டணத்தை உண்மையில் 27 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், தவறான தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக சுட்டிக்காட்டினார்.