NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்தை, மாமன் மகளை திருமணம் செய்ய தடை!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. 

ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி பல வருடங்களாக கூறி வருகிறது. 

இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமல்படுத்துவது தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று (07) பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடைவிதிக்கப்பட்டுள்ள உறவுமுறைகளாவன… 

1. தாய்

2. வளர்ப்புத்தாய்

3. தாயாரின் தாய்

4. வளர்ப்பு பாட்டி

5. பூட்டி

6. வளர்ப்பு பாட்டியின் தாயார்

7. அம்மாவுடைய அப்பாவின் தாயார்

8. தந்தையின் தாயார்

9. அப்பா, அம்மா வழி பாட்டி

10. அப்பா, அப்பா வழி பாட்டி

11. மகள்

12. மகனின் விதவை மனைவி

13. மகளின் மகள் (பேத்தி)

14. மகளுடைய மகனின் விதவை மனைவி

15. மகனின் மகள்

16. மகனுடைய மகனின் விதவை மனைவி

17. மகளுடைய மகளின் மகள்

18. மகளுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

19. மகளுடைய மகனின் மகள்

20. மகளுடைய மகனின் மகனுடைய விதவை மனைவி

21. மகளுடைய மகளின் மகள்

22. மகனுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

23. மகளுடைய மகனின் மகள்

24. சகோதரி

25. சகோதரியின் மகள்

26. சசோதரனின் மகள்

27. அம்மாவின் சகோதரி

28. அப்பாவின் சகோதரி

29. அப்பாவின் சகோதரர் மகள்

30. தந்தையின் சகோதரியின் மகள்

31. தாயாரின் சகோதரியின் மகள்

32. தாயாரின் சகோதரியின் மகள்

(Widow- விதவை, என்பது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியையும் உள்ளடக்கும்)

Share:

Related Articles