NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஸ்ட்ராசெனிக்கா தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதிலும் இருந்து மீள பெற தீர்மானம்!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனிக்கா தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.

அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே, உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுப்பூசிகளை மீளப்பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மே ஏழாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles