NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையர்களுக்கு விசா வழங்கும் பிரபல ஐரோப்பிய நாடு!

பின்லாந்தில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலான குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்ப கோரிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதிக்குள் மொத்தம் 8,762 ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, பின்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே காலகட்டத்தில், பின்லாந்து மொத்தம் 7,039 பேருக்கு குடியிருப்பு அனுமதிகளை வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், படிப்பு நோக்கங்களுக்காக 5,911 குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை பின்லாந்து பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகமாக இருந்தது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தங்கள் படிப்பு இலக்காக பின்லாந்து நாட்டைத் தெரிவு செய்துள்ளனர்.

Share:

Related Articles