NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் சிறந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் ர்நடெநல Pயளளிழசவ ஐனெநஒ நிறுவனம் மேற்கொண்டுள்ள தரப்படுத்தலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி இலங்கையின் கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் இருந்து 8 இடங்கள் முன்னேறி 95ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி விசா இல்லாமலோ அல்லது ஒன் – அரைவல் விசா மூலமோ 41 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.

சிங்கப்பூர், மாலைத்தீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு இலங்கை இந்த வசதியை வழங்கியுள்ளது.

இதேவேளை 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் இந்திய கடவுசீட்டு 5 இடங்கள் முன்னேறி 80ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் 5 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த ஜப்பான், முதல் முறையாக 3ஆவது இடத்திற்கு தரமிறங்கியுள்ள நிலையில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுசீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் இந்த தரவின் அடிப்படையில் இறுதி இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles