NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளுர் விலை குறைக்கப்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஒரு கிலோ கோழி இறைச்சியின் உள்ளுர் விலை குறைக்கப்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டும் என வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு மானிய விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, கோழி இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கோழி இறைச்சியை இறக்குமதி செய்யுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சந்தையில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை, தற்போது 1,450 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

உள்ளுர் சந்தையில் விலையை குறைக்கும் வகையில் உற்பத்தி தேவைக்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி விசேடமாக பணிப்புரை விடுத்ததாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles