NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐபோன் வெடிக்கும் அபாயம் : ஐபோன் நிறுவனமே எச்சரிக்கை !

ஆப்பிள் ஐபோனை சரியான முறையில் சார்ஜ் செய்யவில்லை என்றால் அது வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு ஆய்வுகளும் கூட மொபைல்கள் சூடாகி அதன் பேட்டரி வெடித்து சிதறுவதை உறுதி செய்துள்ளன. தற்போது இதே தகவலைதான் எச்சரிக்கையாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் மொபைல் மற்றும் சார்ஜர்களை மின்சாரத்தோடு இணைத்தபடியே விட்டுவிட்டு உறங்க செல்வதோ, தலைகாணி, படுக்கை உள்ளிட்ட பகுதிகளில் வைத்து விட்டு உறங்குவதோ அல்லது காற்றோட்டம் இல்லாத இடங்களில் மொபைலை சார்ஜில் போட்டு விட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

உங்கள் டிவைஸ்களை நல்ல காற்றோட்டம் அதிகமான பகுதிகளில் வைத்து கொள்ளவும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சேதமான சார்ஜிங் கேபிள், சார்ஜர் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள சூழலில் சார்ஜ் செய்தல் குறித்தும் எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பான சார்ஜிங்
பொதுவாகவே மொபைல்களை சார்ஜ் செய்யும்போது அவை குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும். அந்த சமயத்தில் சார்ஜ் மற்றும் டிவைஸ் இருக்கும் பகுதி காற்றோட்டம் இல்லாத பகுதியாக இருந்தால் அந்த வெப்பம் வெளியேற வழியின்றி உங்கள் மொபைல் வெடித்து சிதற கூட வாய்ப்புள்ளது. எனவே, காற்றோட்டம் அதிகமான பகுதிகள் மற்றும் டேபிள் போன்ற பெரிய பரப்புகளில் சார்ஜ் செய்யுங்கள் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

தூங்கும்போது எச்சரிக்கை
மேலும், மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு தூங்க செல்வது, உடலின் மீது, உடலுக்கு மிக அருகில் வைத்து விட்டு தூங்க செல்வது மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளனர் டெக் வல்லுநர்கள்.

ஐபோன் தானே பிராண்டட் என்று நினைத்து கொண்டு இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்து விடாதீர்கள். ஐபோன் மட்டுமல்ல எந்த விதமான ஸ்மார்ட் போனுக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

Share:

Related Articles