NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வூதியம் பெறும் வரை பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாம் – ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கோரிக்கை!

(யோ.தர்மராஜ்)

நாங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் வரை தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் எப்.எம் செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

தற்போதுள்ள பாராளுமன்றத்தில் அதிகமான புதுமுக உறுப்பினர்கள் ,ருப்பதால், ,டைநடுவோ பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற முடிவில் இருப்பதால் இந்த பாராளுமன்றத்தின் பதவி காலம் முடியும் வரை உறுப்பினர்களாக இருக்கும் சந்தர்ப்பத்தை வழங்குமாறும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

எனவே, பாராளுமன்றத்தை கலைக்காது, ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்திய பின்னர், 48 நாட்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் முக்கிஸ்தர் ஒருவர் தமிழ் எப்.எம் செய்தி பிரிவிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles