NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசாவில் இந்தோனேசிய மருத்துவமனையை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேலிய இராணுவ பீரங்கிகள்!

காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையை இஸ்ரேலிய இராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்துள்ள நிலையில், இன்று காலை முதல் இஸ்ரேலிய நேரடி தாக்குதல்களில் தற்போது வரை குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் சுகாதார அமைச்சின் இயக்குனர், அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேலின் கூற்றை நிராகரித்து, அதை “சுத்தமான பொய்” என்று விவரித்தார்.

ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடங்கியதில் இருந்து காஸாவில் இதுவரை 13,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில், ஹமாஸின் தாக்குதல்களில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட சரக்குக் கப்பலைக் கைப்பற்றி 24 பணியாளர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Share:

Related Articles