NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கால்பந்து இறுதிப் போட்டியில் கலந்து அரங்கை அதிர வைத்த அண்டர்டேக்கர்!

2020ஆம் ஆண்டு மல்யுத்தத் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற WWE லெஜண்ட் தி அண்டர்டேக்கர் (Undertaker), அண்மையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த கால்பந்து இறுதிப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு அரங்கம் அதிரும் வகையில் களம் இறங்கியுள்ளார்.

அண்டர்டேக்கரின் எதிர்பாராத இந்த வருகையானது உலகளாவிய கால்பந்து ரசிகர்களை மாத்திரமன்றி மல்யுத்த உலகையும் மெய்சிலிர்க்க வைத்தது.

சவுதி அரேபியா நாட்டில் 2024 ரியாத் தொடர் கிண்ணம் எனும் கால்பந்து இறுதிப் போட்டி நேற்று (08) கிங்டம் அரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அல் நசாரும், அல் ஹிலா அணிகளும் மோதின. ஆட்டத்தில் அல்-ஹிலால் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த இறுதிப் போட்டி ஆரம்பிக்கும் முன், இரு அணி வீரர்களும் அரங்கில் வரியாக நின்றிருக்க, எவரும் எதிர்பாராத வகையில் மல்யுத்த அரங்கில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எதிரிகளுக்கு மரணம் பயணத்தை காட்டிய தி அண்டர்டேக்கர் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

சாதாரணமாக இல்லாமல் WWE போட்டிகளில் வருவது போலவே கருப்பு கோட் அணிந்து, WWE-வில் அண்டர்டேக்கருக்கு என ஒலிக்கப்படும் இசையுடன் அவர் உள்ளே வந்தார்.

இரு அணி வீரர்களும் இரண்டு பக்கமும் நின்று இருந்தனர். அவர்கள் முன் தனக்கே உரிய கம்பீரத்துடன் அண்டர்டேக்கர், மூடப்பட்டிருந்த கிண்ணத்தை திரை நீக்கம் செய்து, கிண்ணத்தை கையில் எடுத்து உயர்த்திக் காட்டினார்.

Share:

Related Articles