NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குழந்தைகள் தொலைபேசியை பயன்படுத்துவது தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை !

குழந்தைகள் விளையாடும் ஒன்லைன் விளையாட்டுக்களில் குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை மற்றும் தவறான காட்சிகள் உள்ளன எனவும் பெற்றோர் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் எனவும் கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறான ஒன்லைன் விளையாட்டுக்களுக்காக குழந்தைகள் பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர் எனவும் 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்ட வேண்டாம் என அமெரிக்க உளவியல் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்டி உணவளிக்கும் பெற்றோர் அதனை உடனே நிறுத்த வேண்டும்” என வும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles