NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்காக கால்வாய் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்காக கால்வாய் அணைகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக, திறைசேரி 595 மில்லியன் ரூபாவை இலங்கை காணி மீட்பு கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்கியுள்ளது.

கொழும்பு நகரின் பிரதான கால்வாய் அமைப்பு 44 கிலோமீற்றர் கொண்டது மற்றும் இந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களில் பல துர்நாற்றம், வண்டல், பிளாஸ்டிக் போத்தல்கள், பீர் கேன்கள், செருப்புகள், சுகாதார பொருட்கள், கழிவு நீர் மற்றும் எண்ணெய் போன்றவை நிறைந்துள்ளன.

இதன் காரணமாக மிக சிறிய மழை பெய்தாலும் கொழும்பு நகரின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே, கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதான கால்வாய் அமைப்பு, நீர்த்தேக்கங்கள், உடற்பயிற்சி பாதைகள், குளங்கள், பூங்காக்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு இலங்கை நில மீட்புக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Related Articles