NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டமாகியது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் !

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான விரைவான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் கண்டி சட்டத்தரணிகளுடனான சிநேகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அனைத்து துறைகளிலும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதிய சட்ட முறைமை கொண்டுவரப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, அந்த செயற்பாடுகளுக்கு சட்டத்துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Share:

Related Articles