NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நேற்று (30) இ;நத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அராலி பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் உள்ள வயல் வெளிகளுக்குள் கடல் நீர் உட்புகாத வகையில் மணல் மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த மணல் மேட்டில் உள்ள மணலை நேற்றைய தினம் 5 டிப்பர் வாகனங்களில் வந்தவர்கள், அகழ்ந்து டிப்பரில் ஏற்றிக்கொண்டு இருந்தவேளை வயல் வேலைக்கு சென்றவர்கள், அவர்களிடம் அது குறித்து வினவிய போது, தாம் அனுமதி பெற்று, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவித்து விட்டு தான் மணல் அகழ்வதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட வயலில் வேலைக்கு சென்றவர்கள், கிராம சேவையாளருக்கும், ஊர் இளைஞர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து அங்கு சென்ற கிராம சேவையாளரும் சில இளைஞர்களும் அவர்களிடம் அனுமதி பத்திரத்தை கோரிய போது அதனை எடுத்து காட்டுவது போன்று பாசாங்கு செய்து, டிப்பர் வாகனங்களை இயக்கி தப்பி ஓடினர்.

அதில் ஒரு டிப்பர் வாகனத்தை இளைஞர்கள் மடக்கி பிடித்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share:

Related Articles