NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச சதுரங்க போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பை பெற்ற யாழ் மாணவன்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவனான இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்றுள்ளார்.

அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 – Finals (U08 Open) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் விளையாடி, சிறந்த முதல் பத்து வீரருக்குள் தெரிவானார்.

பின்னர் தேசிய தெரிவின் இறுதிக்கட்ட போட்டியான Sri Lanka National Youth Chess Championships 2024 – Super League Events இற்கு தகுதிபெற்றார்.

Sri Lanka National Youth Chess Championships 2024 – Super League Events இறுதிப்போட்டியில் ஒவ்வொரு வீரருடனும் நேருக்கு நேர் மோதி தேசிய சம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதன்படி, இவ்வாண்டு இடம்பெறவுள்ள Commonwealth Chess Championship Malaysia, ஐரோப்பாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள World Cadet Championship, பிரேசிலில் நடைபெறவுள்ள World Youth Chess Championships, கசகஸ்தானில் நடைபெறவுள்ள Asian Youth Chess Championship மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள Western Asia Youth Chess Championship ஆகிய போட்டிகளில் பங்குக்கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் இலங்கையில் 08 வயதுப்பிரிவில் அதிகூடிய சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை (Standard Rating 1116) வைத்திருக்கும் பெருமையையும் தன்வசம் வைத்துள்ளதுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றி சாதனைகளை படைத்து இலங்கை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Share:

Related Articles