NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கப்பூரில் இன்று ஜனாதிபதி தேர்தல் !

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகின்ற செப்டம்பர் 13- ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 1 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Share:

Related Articles