NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிரியா மீது அமெரிக்கா வான் தாக்குதல்

சிரியாவில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரண்டு எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதேவேளை பயங்கரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயற்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles