NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவனொளிபாத மலையில் திண்மக்கழிவுகளை அகற்ற ரூ.2 மில்லியன் செலவு!

சிவனொளிபாதமலையில் யாத்திரீகர்களால் போடப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் வருடாந்தம் குறித்த திண்மக்கழிவுகளை அகற்றுவதற்காக பெருமளவு பணம் செலவழிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் டிசம்பர் 26ஆம் திகதி உந்துவப் பௌர்ணமி தினத்தன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற சூழலுக்கு தீங்கான பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நுவரெலியா, இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பக்தர்களுக்கு தேவையான வீதிகள், நீர், மின்சாரம் மற்றும் ஏனைய பொது வசதிகள் எதிர்வரும் நாட்களில் அபிவிருத்தி செய்யப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles