NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று (18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவதால் தேர்தலில் பங்கேற்ற அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை. சில அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற துணை நிறுவனங்களினது ஊழியர்களுக்கு உரிய விடுமுறை கூட கிடைக்கவில்லை.

அவர்களது சேவைக்காலம் முழுவதையும் பாதிப்பதாகவும், இந்நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட்டும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதது ஏன் என்று வினவுவதாகவும் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

மேலும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – சுகாதார அமைச்சுக்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles