NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடர்பு துண்டிக்கப்பட்ட வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா !

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1977 ஆம் ஆண்டு வாயேஜர்-2 என்ற செயற்கைக்கோளை அனுப்பியது.

இது தற்போது பூமியில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 400 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரிய குடும்பத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் கடந்த 46 ஆண்டுகளாக நாசாவுடன் தொடர்பில் உள்ளது.

நாசா விஞ்ஞானிகள் கணிப்பின்படி வருகிற 2027ஈம் ஆண்டு வரை இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டுடன் இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால் கடந்த 2 வாரங்களாக செயற்கைக்கோளில் இருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் ரேடியோ டிஷ் ஆன்டெனாவில் அதிக ஆற்றல் கொண்ட டிரான்ஸ்மீட்டரை பயன்படுத்தி ஒரு புதிய கட்டளையை நாசா அனுப்பி, அதன்மூலம் வாயேஜர்-2 செயற்கைக்கோளின் தொடர்பு மீட்டெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் தகவல் வர தொடங்கி உள்ளது.

Share:

Related Articles