NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நவீன ஏவுகணை சோதனையில் ஈடுபடும் இந்தியா

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. அந்த வகையில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ‘ஐடிசிஎம்’ என்ற நவீன ஏவுகணையை டிஆர்டிஓ நேற்று பரிசோதித்தது. ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் இந்த சோதனையை நேரில் பார்வையிட்டனர்.பல இடங்களில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் ‘ஐடிசிஎம்’ ஏவுகணையின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. ஏவுகணை வெற்றிகரமாக பறந்து சென்று இலக்கை தாக்கியது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக டிஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்திய மத்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles