NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானின் ஊடகங்களை கட்டுப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு !

பாகிஸ்தானின் ஊடகங்களை சீனா கட்டுப்படுத்த முயல்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சீனா கடனுதவி வழங்கி வருகிறது. எனவே பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘பாகிஸ்தானின் ஊடகங்களை சீனா முழுவதும் கட்டுப்படுத்த முயல்கிறது. மேலும் வெளிநாட்டு தகவல்களை கையாளும் முயற்சிகளுக்காக சீனா கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மறை கருத்துகளை வெளியிடவும், தாய்வான் பிரச்சனை, தென்சீன கடல் போன்ற விவகாரங்களில் ஒருபக்க சார்பான கருத்துகளை வெளியிடவும் சீனா முயற்சிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share:

Related Articles