NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட தடை !

பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு ஹோலி பண்டிகைக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை விட வடஇந்திய மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசுவார்கள். இந்த சமயத்தில் ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானில் திடீரென்று ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles