NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இளைஞர் கைது!

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நாடு முழுவதிலுமிருந்தும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, இணையவழியாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், போலியான டிப்ளோமா சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மாணவர்களிடம் இருந்து பல்வேறு திட்டங்களுக்காக ஒரு இலட்சம் ரூபா முதல் 4 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போலி கல்வி நிறுவனத்தை நடத்தி வந்த குறித்த நபரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த கல்வி நிறுவனம் உள்ளூர் அல்லது சர்வதேச தரத்தை கடைப்பிடிக்காமல் இயங்கி வந்துள்ளதாகவும், இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles