NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்று!

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

விடிய விடிய கண் விழித்து நான்கு கால அபிஷேகங்களையும் தரிசனம் செய்து சிவனை வணங்கினால் குபேரனாகும் யோகம் தேடி வரும். சிவனை வணங்க ஆடம்பரம் அவசியமில்லை. மனதில் தூய்மையோடும்இ பக்தியோடும் சிவனை நினைத்தாலே கேட்ட வரம் கொடுப்பார்.

மகா சிவராத்திரி மகிமை நிறைந்தது. கருட புராணம்இ அக்னி புராணம்இ கந்த புராணம்இ பத்ம புராணம்இ அருணாசல புராணம்இ சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன. மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்றார் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.

மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை சுக்கிரவார பிரதோஷத்துடன் இணைந்து மகா சிவாராத்திரி வருவது சிறப்பு வாய்ந்தது.

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்துஇ பல கல்பங்கள் முடிந்துஇ இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்இ நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.

மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும்.

ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும்இ பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசிஇதேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.

Share:

Related Articles