NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாலைதீவுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வரும் மாலைதீவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். சுற்றுலா துறையில் மட்டுமே இந்நாட்டின் வருமானம் தங்கியுள்ளது.

எனினும், சமீபத்தில் மாலைதீவு ஜனாதிபதியாக சீன ஆதரவாளரான முகமது முய்சு பதவியேற்ற பிறகு 

அயல் நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.மாலைதீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

மேலும் இந்திய பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் இலட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலைதீவு அமைச்சர்கள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் 3 அமைச்சர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு பிறகு மாலைதீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு மாலைதீவுக்கு மொத்தம் 17 இலட்சம் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 198 பேர் இந்தியர்கள் ஆவார்கள். 

அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்ய மற்றும் சீனர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்தியர்கள் வருகை தற் போது குறைந்துள்ளதால் தற்போது 5ஆவது இடத்துக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles