NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசந்தகால மலர் கண்காட்சி..

நுவரெலியா மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி மற்றும் பொது கண்காட்சிக்கான விழா நுவரெலியா மாநகர சபையினால் ஏறத்தாழ நாற்பது வருடங்களாக இந்த வசந்தகால மலர்க் காட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வசந்த காலத்தை ஒட்டி அழகிய நுவரெலியா வசந்த மலர் கண்காட்சி 20 ஆம் திகதி மற்றும் நேற்று விக்டோரியா பூங்காவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சி.பி.ரத்நாயக்க மற்றும் இந்திய மேலதிக உயர்ஸ்தானிகர் (கண்டி) குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் ஆதிரா சரசன் ஆகியோர் தலைமையில் 2024 வசந்த மலர் கண்காட்சி 20 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ ஆரம்பமானது.

உள்ளகத் தோட்டங்கள் மற்றும் வெட்டுப் பூக்கள் போன்ற வடிவங்களில் பல கூறுகளை உள்ளடக்கிய வசந்த மலர் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நேற்று நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நுவரெலியா மாநகரசபையின் முன்னால் நகர முதல்வர்கலான நளின் திலக ஹேரத், மஹிந்த தொடம்பே கமகே சந்தன லால் கருணாரத்ன, மற்றும் நுவரெலியா மாநகரசபையின் பதில் மாநகர ஆணையாளரும் மேலதிக மாவட்ட செயலாளருமான (நிர்வாகம்) சுஜீவா போதிமான்ன அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான அதிதிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வசந்த மலர் கண்காட்சியை காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருப்பது சிறப்பம்சமாகும்.இதேவேளை மலர்கண்காடசியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரீசில்களும் வழங்கி வைக்கப்பட்டது

Share:

Related Articles