NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இனி வாக்களிக்கலாம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இணையவழி தொழிநுட்பத்தின் ஊடாக வாக்களிப்பை பதிவு செய்யும் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இதன் ஊடாக வாக்களிப்பில் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்குவதற்கான அவசியம் குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

சார்க் பிராந்திய நாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கொள்கை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு போன்ற சார்க் பிராந்திய நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்காரணமாக, இந்த நாடுகளுக்கு இணக்கமான முறையில் விசா வழங்கும் முறையை தயாரிக்க குழு முன்மொழிவதாகத் தெரிவித்தார்.

Share:

Related Articles