NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 உலகக் கிண்ண தொடருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

T20 உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில்  அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 29 அவரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் குறித்தப்  போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் (CWI), அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ஆண்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் மற்றும் டிரினிடாட் – டொபாகோவில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா, நியூயோர்க் மற்றும் டெக்சாஸ் நகரங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இருப்பினும் அமெரிக்காவில் அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரையிறுதி போட்டிகள் டிரினிடாட் மற்றும் கயானாவில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி பார்படாஸில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் இருந்து உருவாகும் பாதுகாப்புக் கவலைகள் அதிகரித்திருப்பதால், அந்த நாட்டிற்குப் பயணிக்க இந்தியா விருப்பம் காட்டுவது குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles