NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Titanic விடயத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது : டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் அளித்துள்ள நேர்காணலில்,

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கனவே நான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்து இருக்கிறேன். அங்கு எனக்கு கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த பகுதியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோம்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்ஸ் உள்ளன. அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles