NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Xiaomi – Pad 6 Android Tablet அறிமுகம்!

Xiaomi நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய Pad 6 என்ற டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

Pad 6 என்ற இந்த Android Tablet இதற்கு முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த Pad 5 டேப்லெட்டிற்கு அடுத்த Model’லாக வெளியாகியுள்ளது.

இதில் முக்கிய அம்சங்களாக Qualcomm Snapdragon 870 சிப் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 8GB RAM, 256GB Storeage வரை Option’களும் உள்ளன. சீனாவில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த Tab வெளியாகியது. ஆனால் இந்தியாவில் Pad 6 pro வெளியாகவில்லை.

இந்த Pad ஒரு 11 இன்ச் 2.8K பில்லியன் கலர் HDR 10 டிஸ்பிளே வசதியுடன் வெளியாகியுள்ளது. மேலும் 2880×1800 Pixels Resolution, 144HZ refresh rate, 550நிட்ஸ் பிரைட்னஸ் அளவு, 6.51mm மெலிதான டிசைன், 490g எடை குறைவான Body, 309 ppi, Dolby Vision Atmos போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக இதில் 26 நாட்கள் நீடிக்கும் 8840mAh Battery இடம்பெற்றுள்ளது. இதனுடன் 33W Fast Charging வசதி இருப்பதால் 100 நிமிடங்களுக்குள் முழுமையான Charging பெறலாம்.

இதன் பின்பக்கம் 13MP முக்கிய கேமரா இடம்பெற்றுள்ளது. முன்பக்கம் செல்பி கேமரா வசதியாக 8MP வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கேமரா மூலம் 30fps அளவு 4K, 1080P மற்றும் 720p வீடியோ, செல்பி கேமரா மூலம் 30fps அளவில் 1080P, 720P வீடியோ ரெகார்ட் செய்யமுடியும்.

இதில் அதிக திறன் பெற்ற 4 Dolby Atmos ஸ்பீக்கர் வசதி, WiFi 6, Bluetooth 5.2, USB போர்ட், ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க MIUI Smartphone Link வசதி, PC கருவிகளுடன் இணைக்க HDMI -Type C கேபிள் வசதியும் உள்ளது. இதில் கூடுதலாக Keyboard வசதி மற்றும் ஸ்டைலஸ் பேனா வசதி உள்ளது. இதை பயன்படுத்தி நாம் Laptop போல Typing, Designing போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

Share:

Related Articles