NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Oppenheimer” படம் எப்படி இருக்கிறது?

உலகம் முழுவதும் இயக்குனர்களுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருக்கதான் செய்கிறது. அந்த வகையில் "Nolan"  ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரின் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது "Oppenheimer".

Oppenheimer படத்தை நோலன் எடுக்கப்போகிறார் என்றதுமே அவருடைய ரசிகர்கள் குஷி ஆனாலும், உலகின் பல இடங்களில் எதிர்ப்பு குரல் தான் பதிவானது.

ஆனால், நோலன் படத்தில் காட்டியதே வேறு, இதை ஏண்டா செய்தோம் என்று Oppenheimer கலங்கும் வன்னம் பல காட்சிகளை வைத்துள்ளார்.

Oppenheimer ஆக Cillian Murphy நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருட Oscar பட்டியலில் பெயர் உண்டு. அதிலும் அணுகுண்டு வீசிய பிறகு அவர் குற்ற உணர்ச்சியால் கலங்கும் இடம், நான் அணுவை இசையாக உணர்கிறேன் என்று அணுகுண்டு வெடிப்பதை இசை போல் நினைக்கும் காட்சி என அசத்தியுள்ளார்.

படம் கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படமாகவே நகர்கிறது, அதனால் பொறுமை இருந்தால் மட்டுமே நீங்கள் செல்லலாம்.

படத்தின் மிகப்பெரும் சுவாரஸ்ய காட்சி Albert Einstinஐ Oppenheimer சந்திக்கும் இடம் தான், அதிலும் அவரிம் Oppenheimer என்ன பேசினார் என்பதை காட்டும் இடம் நோலன் என்ன சொல்ல வந்துள்ளார் என்பது படத்தில் மிக தெளிவாக புரிந்து விடும்.

Share:

Related Articles