NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்ட பெண்கள், ஆண்கள் ஆகிய இருசாராரிடமிருந்தும் விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தின் “Our Services” இன் கீழ் உள்ள “Online Applications – Recruitment Exams” எனும் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பப்படிவங்களை நிகழ்நிலை (Online) முறையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்று மு.ப 09.00 மணிக்கு ஆரம்பித்து 2024.07.12 ஆம் திகதியன்று பி.ப 09.00 மணிக்கு நிறைவடையும். இதற்கான பரீட்சை 2024, ஓகஸ்ட் மாதத்தில் நடாத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles