பிலியந்தலையில் சமூகப் பிறழ்வான காணொளிகளை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபடும் நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்த தம்பதிகள் கடந்த மார்ச் மாதம் குறித்த வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நிறுவனமானது காணொளியின் தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து காணொளி ஒன்றிற்கு ரூபா 50,000 முதல் 100,000 வரை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.