அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பொழுது போக்கு பூங்கா உள்ளது.
விடுமுறையையொட்டி இந்த பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ராட்டினங்கள் மற்றும் ரைடர்களில் ஏறி பொழுதை போக்கி வந்தனர்.
இந்நிலையில், அட்மாஸ்பியர் எனப்படும் சாகச ராட்டினத்தில் சுமார் 30 பேர் ஏறி பயணம் செய்தனர். அப்போது திடீரென அந்த ராட்டினம் செயல்படாமல் போனது. இதனால் அதில் பயணம் செய்த 30 பேரும் தலைகீழாக தொங்கினர். உரிய பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் அவர்களால் உயிர் பிழைக்க முடிந்தது. ஆனாலும் உடனடியாக அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அவசர கால பணியாளர்கள் விரைந்து சென்று ரைடரை சரி செய்து அதில் இருந்த 30 பேரையும் மீட்டனர். சுமார் அரை மணி நேரமாக அவர்கள் தலைகீழாக தொங்கியதால் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.