இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 முறைப்பாடுகளின் அடிப்படையில் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தையோ காணொளியையோ பதிவிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. மேலும், 967 கணக்குகள் தீவிரவாதத்தை ஊக்குவித்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.