NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கை உழவு இயந்திரத்துடன் பஸ் மோதி விபத்து – பெண் ஒருவர் பலி..!

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அந்த விபத்தில் காயமடைந்த, மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles