NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல காமெடி நடிகரான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் அடுத்து டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஹீரோயின் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி தான் அடுத்து சந்தானம் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே தெலுங்கில் பிரபலமாக இருக்கும் மீனாட்சி சவுத்ரிக்கு GOAT படத்திற்கு பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வந்து குவிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles