NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் அதியுயர் பட்டம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு உலகின் அதியுயர் பாதுகாப்பு பதவிக்குரிய பட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆறு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்பட்ட மார்ஷல் பதவியை அவர் தனது சொந்த கோரிக்கையின் அடிப்படையில் பெறப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் போர் வெற்றிக்கான அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவியை தற்போது வகிக்கிறார்.

இவருக்கு வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மார்ஷல் பதவி இதற்கு முன்னர் உலகின் பல பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles