NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் குடல் அலர்ஜி நோயினால் சிறுவன் பலி..!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் சிறுவன் ஒருவர் குடல் அலர்ஜி நோயினால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் 21 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் குடல் அலேர்ஜி நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக தெரியவந்துள்ளது.

மேலும்,சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:

Related Articles