NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிக்கோலஸ் பூரனின் புதிய சாதனை!

T 20 உலகக் கிண்ணத்தில் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

T 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 08 சுற்றின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை ஈட்டியது. இதன் மூலமாக, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்கின்றது.

அமெரிக்காவுக்கெதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப் 82 ரன்கள் பெற்றும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்கள் பெற்றும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இப்போட்டிக்குப் பின்னர் நிக்கோலஸ் பூரன் T 20 உலகக் கிண்ணத் தொடர்களில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். T 20 உலகக் கோப்பைத் தொடரொன்றில் அதிளவான சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் இதன் மூலமாக படைத்துள்ளார்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் மாத்திரம் அவர் 17 சிக்ஸர்கள் விளாசித் தள்ளியுள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற T 20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 16 சிக்ஸர்கள் விளாசியிருந்தமை T 20 உலகக் கிண்ணத் தொடரொன்றில் தனி நபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. கிறிஸ் கெயிலின் இச்சாதனையை தற்போது நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles