NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோட்டார் வாகன உற்பத்தி /பொருத்துவது – உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிற்துறையின் தற்போதைய நிலை!

இலங்கையினுள் பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைகள் தோன்றும் போது மட்டுமே, உற்பத்திசார் பொருளாதாரம் தொடர்பில் அதிகளவில் பேசப்படுகின்றது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் உற்பத்திசார் பொருளாதார வழிமுறையை கொண்டு நடத்துவதற்கு காணப்படும் கொள்கைகள் போதியதாக இன்மை, இது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் காணப்படும் அறிவு போதியதாக இன்மை மற்றும் பொறுப்பதிகாரிகளின் குறைந்த அக்கறை போன்றவற்றால் அரசாங்கத்தின் கொள்கையாக, தொழிற்துறை அபிவிருத்திப் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் பெறுபேறாக, மோட்டார் வாகன உற்பத்தி/பொருத்துதல் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிற்துறை அவ்வப்போது ஆரம்பிக்கப்பட்டாலும், அதுவும் வலுவிழந்தது. 1980 ஆம் ஆண்டு வரை இது தொடர்பான நினைவுகள் கடந்து சென்றாலும், 2020 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் இந்த தொழிற்துறைக்கு பொருத்தமான …

  • முழுமையான ஆதரவு கிடைக்காததுடன், 2021 ஆம் வருடத்தில் தொழிற்துறை அமைச்சு முன்வந்து, இதர அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுடன் இணைந்து, மோட்டார் வாகனங்கள் பொருத்துதல்/உற்பத்தி செய்தல் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்தல் போன்றவற்றுக்கு பொருத்தமான நிறைவேற்று செயற்பாட்டு வழிமுறையை (SOP) அறிமுகம் செய்திருந்தது.

தொழிற்துறை அமைச்சின் செயற்பாடுகள்

  • இலங்கையை உற்பத்திசார் பொருளாதாரமாக மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் தேசிய உற்பத்தி தொழிற்துறையை அபிவிருத்தி செய்து இந்நாட்டை அபிவிருத்தி செய்வதில் பிரதான பங்கு தொழிற்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உற்பத்தி தொழிற்துறைகள் 20 இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் இந்நாட்டு மோட்டார் வாகனங்கள் பொருத்துதல்/உற்பத்தி செய்தல் மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்தல் முக்கிய ஸ்தானத்தைப் பெற்றுள்ளது.
  • அதுபோலவே, தொழிற்துறை அமைச்சின் பங்கேற்புடன் இந்த தொழிற்துறைக்கு பொருத்தமான மோட்டார் வாகனங்கள் உதிரிப்பாகங்கள் உற்பத்தி மற்றும் பொருத்துகை ஆலோசனை குழுவும் நிறுவப்பட்டுள்ளதுடன், இந்தத் தொழிற்துறையினுள் ஈடுபாட்டைக் கொண்டுள்ள தொழிற்துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட செயற்பாட்டு முறைமை மற்றும் அதன் சட்டபூர்வ நிலை

  • இலங்கையினுள் வாகனங்கள் பொருத்துவது /உற்பத்தி செய்வது அவ்வப்போது நடைபெற்றாலும், நிறைவேற்று செயற்பாட்டு வழிமுறை (SOP) ஊடாக அந்த தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவது, அபிவிருத்தி செய்வது போன்ற நோக்கங்களுடன், துறைசார் நிபுணர்களின் கருத்துகளை உள்வாங்கி, சர்வதேச தரங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட நிறைவேற்று செயற்பாட்டு வழிமுறையை கௌரவ தொழிற்துறை அமைச்சரினால் 2020/12/16 அன்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்ததுடன், 2021/01/11 அன்றைய தினம் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது. அது 2021/01/19 திகதியிடப்பட்ட அமைச்சரவை இல. 20/205/320/012-01 எனும் ஆவணத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து 2021/04/05 அன்றைய தினம் இல. 2222/3 எனும் வர்த்தமானி அறிவித்தலினூடாக சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.
  • நிறைவேற்று செயற்பாட்டு வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளாக, வாகன இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுவதுடன், கொரோனா தொற்றின் காரணமாக வாகன இறக்குமதியை இடைநிறுத்தியமையால் நாட்டின் ஆகக்குறைந்த வாகன தேவையை பூர்த்தி செய்வது என்பன அமைந்திருந்தன.
  • எவ்வாறாயினும், இதன் பரந்த நோக்காக குறிப்பிடக்கூடியது,

(i) எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளருக்கும் இந்நாட்டின் வாகன உற்பத்தி /பொருத்துதல் தொழிற்துறையில் நம்பிக்கையுடன் முதலீடு செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது.

(ii) தேசிய பெறுமதி சேர் சூத்திரத்தை மற்றும் கொள்கைகள் அறிமுகம் செய்வதனூடாக வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி தொழிற்துறையை வேகமாக அபிவிருத்தியடைச் செய்வது (DVA Formula & XID Metrix).

(iii) வாகன பொருத்துகை தொழிற்துறை மற்றும் உதிரிப் பாகங்கள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன தொழினுட்பத்தை நாட்டினுள் கொண்டு வருவதற்கும் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆய்வு மற்றும் விருத்தி பிரிவுகளை அபிவிருத்தி செய்வது.

(iv) பொறியியல் மற்றும் தொழினுட்ப பாடங்களுக்கமைய தொழினுட்ப அதிகாரிகள், பொறியியலாளர்கள் பல ஆயிரம் பேரை பயிற்றுவிப்பது மற்றும் பயிற்சியின் பின் தொழில் வாய்ப்புகளை வழங்குவது அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பி அதிக சம்பளத்தில் தொழில் புரிய அனுமதியளிக்க அவசியமான பயிற்சிகளை வழங்குவது.

உற்பத்தி மற்றும் பொருத்துதல்

வாகன உற்பத்தி மற்றும் பொருத்துதல் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 முறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. பொருத்துதல் (assembly) பல வழிமுறைகளில் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பிரதான 2 முறைகளாக,  

(i) CKD : Complete Knock-Down (முழுமையாக பிரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களை பொருத்துவது)

(ii) SKD : Semi Knock-Down (பகுதியளவில் பிரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களை பொருத்துவது)

இந்த 2 முறைகளும் இலங்கையினுள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 முறைகளாக அமைந்திருப்பதுடன், உள்நாட்டில் பொருத்தும் நிறுவனங்கள் இந்த 2 முறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பொருத்துதலை மேற்கொள்கின்றன.

தேசிய மட்டத்தில் வாகன பொருத்துகை மேற்கொள்ளும் நிறுவனங்கள், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நாமங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பிரதிநிதித்துவ உடன்படிக்கையின் கீழ் அந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஏதேனும் வாகனத் தெரிவை இந்த 2 முறைகளின் கீழ் தேசிய மட்டத்தில் பொருத்துவதற்காக இறக்குமதி செய்கின்றன.

இதன் போது, வாகன இனங்காணும் இலக்கத்தை (VIN), அந்த வாகனத்தின் ஆரம்ப உற்பத்தி நிறுவனம் வழங்கும். இது SOP இல் 4 ஆம் பக்கத்தில் 1.2.5 எனும் பிரிவின் கீழ் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் வாகனமொன்றை பொருத்துவது

தேசிய மட்டத்தில் வாகனமொன்றை பொருத்துவதற்காக முதலில் கீழே தரப்பட்டுள்ள படிமுறைகளை தேசிய மட்டத்தில் வாகனங்களை பொருத்துதலில் ஈடுபடும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.

1. அந்த நிறுவனம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

2. தொழிற்துறை அமைச்சினுள் தொழில்முயற்சியாளராக பதிவு செய்யப்பட்டிருத்தல். (இதற்காக அந்நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பல காரணிகள் காணப்படுகின்றன.)

3. அந்நிறுவனத்தினால் பொருத்துவதற்கு எதிர்பார்க்கும் வாகன மாதிரிக்கான முழுமையான அறிக்கையை (Comprehensive Concept Paper) தொழிற்துறை அமைச்சுக்கு வழங்க வேண்டும் என்பதுடன், தொழினுட்பக் குழுவினால் மேற்கொள்ளப்படும் ஆரம்ப மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து, அதனை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் (Cabinet appointed committee) சமர்ப்பிக்க வேண்டும்.

4. அதன் போது, அந்த அறிக்கை அனுமதிக்கப்பட்டதன் பின்னர், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கும் உதிரிப் பாகங்களின் விபரங்களையும், உள்நாட்டில் திரட்டுவதற்கு எதிர்பார்க்கும் உதிரிப் பாகங்களின் விபரங்களையும் அமைச்சு வழங்க வேண்டும்.

தேசிய பெறுமதியை சேர்த்தல் மற்றும் பரிந்துரைத்தல்

வாகன பொருத்துதலில் ஈடுபடும் நிறுவனத்துக்கு பொருத்தமான வகைக்காக, அந்த வாகனத்தின் தொழிற்துறை செலவில் (Ex-Factory Cost) 20% க்கு விட உயர்ந்தளவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள், வாகனப் பொருத்துதலில் பயன்படுத்த வேண்டும். (தேசிய உற்பத்தி என்பது என்ன என SOP இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.) தேசிய மட்டத்தில் பொருத்தலில் ஈடுபடும் நிறுவனத்தினால், இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு சந்தையிலிருந்து கொள்வனவு செய்யும் உதிரிப் பாகங்களை சேர்த்து, தாம் 20% க்கு அதிகமாக சேர்த்துள்ளதாக உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான அனுமதியும் கிடைப்பதில்லை என்பதுடன் தேசிய பெறுமதியை சேர்ப்பது தொடர்பான கண்காணிப்பு மற்றும் பரிந்துரைக்கும் செயற்பாடுகள் மிகவும் நடைமுறைச் சாத்தியமான மற்றும் முறையான வழிமுறையில் மேற்கொள்ளப்படுகின்றன. சாதாரணமாக பொருத்திக் கொள்ளப்பட்ட வாகனத்துக்காக மாதிரி அனுமதி (Model Approval) கிடைத்ததன் பின்னர், அந்நிறுவனம் உள்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளும் உதிரிப் பாகங்களின் விபரங்களை தொழிற்துறை அமைச்சுக்கு வழங்க வேண்டும். அதன் போது, அந்த ஒவ்வொரு உதிரிப் பாகத்துக்கு தேசிய பெறுமதி கணிப்பிடப்பட்டுள்ள முறை வெவ்வேறாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன், அந்த செயற்பாட்டை பின்வரும் அமைப்புகள் மேற்கொள்ளும்,

(I) தொழிற்துறை அபிவிருத்தி அதிகாரசபை

(II) இலங்கை தேசிய பொறியியல் பரிசோதனை மற்றும் அபிவிருத்தி மத்தியநிலையம்

(III) தேசிய தொழில்பயிற்சியாளர் மற்றும் தொழிற்துறை பயிற்சியளிக்கும் அதிகாரசபை

இந்நிறுவனங்களின் அதிகாரிகளால் குறித்த உதிரிப்பாகத்துக்கு பொருத்தமான அதன் தொழில்நுட்ப ஏற்பாடு, மதிப்பாய்வு பட்டியல்கள் (BOQ), அடிப்படை வரை (Prototype) போன்றவற்றுடன், உதிரிப் பாகத்தின் உற்பத்தி செயன்முறை தொடர்பில் புறப் பரிசோதனையை தொடர்ந்து, தேசிய பெறுமதியாக எந்தளவு தொகை சேர்க்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதுடன், தேசிய உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனும் தெரிவிப்பதை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் தேசிய பெறுமதி சேர்ப்பை உறுதி செய்வதில்லை. அவ்வாறான பரிபூரண பரிசோதனையின் மூலமாக மாத்திரம் தேசிய பெறுமதியை சேர்ப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட தொகையை சேர்ப்பதற்கான அதிகாரம், தொழிற்துறை அமைச்சருக்கு மாத்திரம் காணப்படும்.  அதன் பின்னர் குறித்த வரி விலக்கழிப்பை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படாத எந்தவொரு வாகன மாதிரிக்கும் வரி விலக்கழிப்பை பெற வாய்ப்பில்லை.

வரி விலக்கழிப்பு எவ்வாறு கிடைக்கின்றது?

வெளிநாட்டு உற்பத்தியாளரினால் வழங்கப்படும் உதிர்பாகங்களைப் போன்று உள்நாட்டில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகங்களையும் பயன்படுத்தி பொருத்திக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கு வரி கணிப்பிடுவது மற்றும் அறவிடுவது 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி விசேட விதிமுறை சட்டம், அதன் திருத்தமான 1990 ஆம் ஆண்டின் இல. 40 ஐ கொண்ட உற்பத்தி வரி (விசேட நிலைகள்) சட்டம், 1994 ஆம் ஆண்டின் இல. 8 ஐ கொண்ட உற்பத்தி வரி விசேட நிலை திருத்த சட்ட மற்றும் சுங்க சட்டம் ஆகியவற்றுக்கமைய மேற்கொள்ளப்படும். 1994 ஆம் ஆண்டின் இலக்கம் 8 ஐ கொண்ட உற்பத்தி வரி விசேட நிலை (திருத்திய சட்டம்) 03 (ஆ) (1) என்பதன் கீழ், நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய இல. 2346/36 (2021/12/31) அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலினூடாக குறிப்பிட்ட வகையில் தேசிய பெறுமதி சேர்க்கப்பட்ட வாகனத்தை தயாரிப்பு பகுதியிலிருந்து வெளியே கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் அறவிடப்பட வேண்டிய வரியின் அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (வர்த்தமானி அறிவித்தலின் 55A, 56A பக்கங்கள்) இதில் உற்பத்தி வரிக்காக மாத்திரம் இந்த வரி விலக்கழிப்பு வழங்கப்படுவதுடன், சுங்க சட்டத்தினூடாக கையாளப்படும் வரிகள் முழுமையாக செலுத்தப்படும். (உதாரணம்: பெறுமதி சேர்க்கப்பட்ட தொகையின் மீது வரி முழுமையாக செலுத்துவது மேற்கொள்ளப்படும்.) இந்த வரி விலக்கழிப்பை பெற்றுக் கொள்வதற்கு, மேலே தெரிவிக்கப்பட்ட வகையில், தேசிய பெறுமதியை உள்வாங்கியமை உறுதி செய்வதற்கு வாய்ப்பு காணப்படும் பொருத்துகையில் ஈடுபடுவோருக்கு மட்டுமே.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பொருத்தும் பகுதிகளினுள் கொண்டு வரல் மற்றும் பொருத்துதல்கள்

தேசிய பெறுமதியை சேர்த்து பொருத்துதலில் ஈடுபடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப் பாகங்கள் பொருத்தும் பகுதிகளினுள் கொண்டு வரப்படும். இந்த பொருத்தும் பகுதிகள் வசதிக்காக பொருத்துதலில் ஈடுபடும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், சுங்க சட்டத்தின் 69 ஆம் சரத்துக்கமைய பொருத்தும் பகுதிக்கான வசதி வழங்கப்படும். அதுபோன்று பொருத்தும் பகுதியினுள் உற்பத்தி செய்வதற்கு அல்லது பொருத்துவதற்கு பொருட்கள் கொண்டு வர முடியும் என்பது சுங்க சட்டத்தின் 84A (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொருத்தும் பகுதியினுள் உதிரிப் பாகங்களாக பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. பொருத்தும் பகுதிகளினுள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களைக் கொண்டு வாகன உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், செயற்பாட்டின் நிறைவில் வாகனம் ஒன்று உற்பத்தி செய்யப்படும்.

உதிரிப்பாகங்களாக பொருத்தும் பகுதியினுள் கொண்டு வரப்படும் பாகங்களை பொருத்தும் நடவடிக்கையை தொடர்ந்து வாகனமாக மாற்றம் பெறுவதுடன், பகுதிகளாக கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், வாகனத்தின் அடிப்படை அம்சங்கள் அதில் காணப்பட்டன என்பதை ஒருபோதும் தெரிவிக்க முடியாது. வாகனமொன்றின் பகுதிகளை தனித்தனியாக எடுத்துக் கொண்டால், பொடி ஷெல் (Body Shell) அல்லது என்ஜின், கியர் கட்டமைப்பு (Gear Box) அல்லது சுக்கான் (Steering Wheel) வாகனமாக காண்பிக்க முடியாது.  அத்துடன், வாகனமொன்றிலிருந்து கிடைக்கும் பயனை தனித்தனியாக இந்த உதிரிப்பாகத்தினால் பெற்றுக் கொள்ள முடியாது. அது வெறும் உதிரிப் பாகம் மட்டுமேயாகும்.

சொகுசு வரி

2024 மார்ச் 05 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 2019 மார்ச் 6ஆம் திகதி முதல், குறிப்பிட்ட மோட்டார் வாகனங்களுக்கு சொகுசு வரி அறவிடப்படுகின்றது. சொகுசு வரி எல்லைப் பெறுமதியை விஞ்சும் வகையில் இந்த வாகனங்களின் விலைகள் அமைந்திருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு வாகன வகையிலும் இந்த எல்லைப் பெறுமதியை விட அதிகமான தொகைக்கு மாத்திரம் வரி அறவிடப்படுகின்றது.

சொகுசு வரி விலக்கழிப்பு எல்லையை கவனத்தில் கொள்ளும் போது, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் CIF பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் உள்நாட்டில் பொருத்தப்படும் வாகனங்களில், இந்த எல்லைப் பெறுமதி, அவற்றின் தொழிற்சாலைச் செலவின் பிரகாரம் கணிப்பி்டப்படுகின்றது. இதில் body shell மற்றும் உதிரிப் பாகங்களுக்கான CIF பெறுமதி மட்டுமன்றி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு சேர்க்கப்படும் பாகங்களுக்குமான செலவும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இதனால், உள்நாட்டில் பொருத்தப்படும் வாகனங்கள், வெளிநாடுகளில் முழுமையான வடிவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், அதிகளவு சொகுசு வரிக்கு உட்படுகின்றன. மேலும், உள்நாட்டில் பொருத்தப்படும் ஒவ்வொரு தொகுதி வாகனங்களின் விலைகளையும் பட்டய கணக்காளர் உறுதி செய்வதுடன், உள்நாட்டு வாகன பொருத்துகைக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவினால் மேலதிக உறுதிப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படும். எனவே, உள்நாட்டு தொழிற்சாலையில் வாகன பொருத்துகையின் போது ஏற்படும் செலவின் மீது கணிப்பிடப்படும் சொகுசு வரியானது, சரியான முறையாக கருதப்படுவதுடன், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் CIF பெறுமதி மீதான கணிப்பீடு, சொகுசு வரியை குறைப்பதற்காக மாற்றப்படக்கூடியது என்பதால் சரியானதாக அமைந்திருக்காது.

பொருத்துனர்களின் தொழிற்பாட்டு செலவு

இலங்கையில் உள்நாட்டு வாகன பொருத்துகையில் ஈடுபடும் நிறுவனங்கள் முறையான செயன்முறைகளுடன், நாடு முழுவதிலும் செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், பெருமளவு ஊழியர்களையும் பணிக்கமர்த்தியுள்ளன. வாகன உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சர்வதேச வழிகாட்டல்களை பின்பற்றுவதாக இந்த செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். அதுபோன்று, இந்த நிறுவனங்களின் தொழிற்பாட்டு செலவுகள் பெருமளவில் உயர்வானதாகும், முன்னைய ஆண்டுகளில் பெருமளவு நிதிச் செலவுகள் ஏற்பட்டிருந்தன என்பதை அவற்றின் நிதி அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன. எனவே, இந்த நிறுவனத்தின் இலாபகரத்தன்மை அவற்றின் நிகர இலாப மட்டங்களின் அடிப்படையில் மாத்திரம் கணிப்பது தவறான பொறிமுறையாகும்.

பொருத்துதலில் ஈடுபடுவோருக்கான ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள்

தொழிற்துறை அமைச்சில் பதிவு செய்து கொண்டமைக்கு மேலதிகமாக, உள்நாட்டு வாகன பொருத்துகை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அரச அதிகார சபைகளிலும் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அவற்றில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மோட்டார் வாகன பதிவு திணைக்களம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி சபை (IDB) போன்றன அடங்குகின்றன. இந்த அரசாங்க அதிகார அமைப்புகளால் நிர்ணயிக்கப்படும் ஒழுங்குவிதிமுறைகளை இந்நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும். மேலும், வருடாந்தம் சுயாதீன கணக்காய்வுகளுக்கு இந்நிறுவனங்கள் உட்படுத்தப்படுவதுடன், அதனூடாக தமது வியாபாரங்கள் நம்பிக்கையான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்கின்றன.

வாகனப் பொருத்துகையில் ஈடுபடுவோருக்கான வரி ஒழுங்கங்கள்

ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று, வாகன பொருத்துகையில் ஈடுபடுவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், வரி ஒழுங்குவிதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நடைமுறையிலுள்ள வரிச் செலுத்தல்களை அவர்கள் பின்பற்றுவதுடன், வருடாந்த மதிப்பீடுகளை பதிவு செய்ய வேண்டும். இறக்குமதி வரிகளுக்கு மேலதிகமாக, தமது எல்லை வருமதிகளில் 48% க்கு அதிகமான தொகையை அரசாங்கத்துக்கு வரியாக பங்களிப்புச் செய்கின்றன. அதில் வற் வரி மற்றும் வருமான வரி போன்றனவும் அடங்குகின்றன. தேசிய முக்கியத்துவதில் இந்நிறுவனங்கள் ஆற்றும் உண்மையான பங்களிப்பு தொடர்பில் ஆராயும் போது இந்த விடயங்கள் பற்றியும் கண்டிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தொழில் உருவாக்கம்

அரசாங்கத்தின் புள்ளி விவரத்தின் பிரகாரம், உள்நாட்டு வாகன பொருத்துகை தொழிற்துறையினூடாக கடந்த சில வருடங்களில் 3200 நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மோட்டார் வாகன வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் சுமார் 5,000 நேரடி ஊழியர்களுக்கு உதவியளித்துள்ளதுடன், இந்த நிறுவனங்களின் உதவிச் சேவைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 20,000 மறைமுக ஊழியர்களுக்கும் கைகொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  உள்நாட்டில் வாகன பொருத்துதலை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் காண்பிக்கும் ஈடுபாடு, பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் மற்றும் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் இந்த நிறுவனங்களுக்கும், அவற்றின் ஊழியர்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந்திருந்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles