NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசா போரில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. காசா போரின் போது 21,000 பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக Save the Children அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என Save the Children அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles