NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்கொரிய பாடலை கேட்ட வடகொரிய இளைஞருக்கு மரண தண்டனை!

தென் கொரியாவின் கே-பாப் இசையை கேட்டதற்காகவும், தென் கொரிய திரைப்படங்களை பார்த்ததற்காகவும் 22 வயது வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் தெற்கு ஹவாங்கே மாகாணத்தைச் சேர்ந்த அந்த வாலிபர், 2022-ம் ஆண்டு 70 தென் கொரியப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று திரைப்படங்களைப் பார்த்ததாகவும், அவற்றைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக, வட கொரிய மனித உரிமைகள் பற்றி தி கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் அரசுக்கு எதிராகவோ, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராகவோ யாரும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மேற்கத்திய கலாசாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விடயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கொடூர தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. வட கொரியா மீது மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles