இங்கிலாந்தின் தொலைக்காட்சி தொகுப்பாளராக கேத்தரின் ஃபார்ஸ்டர் தனது மகன்களுடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற அவரின் 2 மகன்களும் வழிதவறி பாலியில் உள்ள எரிமலையின் மீது எறியுள்ளனர்.
அங்கிருந்து எப்படி இறங்குவது என தெரியாமல் எரிமலையில் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.
அவர்களை மீட்க மீட்புக்குழுவினர் அந்த எரிமலைக்கு புறப்பட்டனர். எரிமலையில் 30 மணிநேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதால், அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கூறிய அறிவுரைகளை வைத்து உயிர்பிழைத்துள்ளனர்.
பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 40 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.