ஞாயிறு நாளிதழ் ஒன்றின் கட்டுரை மற்றும் பரவலாக பரப்பப்பட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் புனையப்பட்டது என அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டேஇவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், ‘ஸ்ரீpலங்கா கிரிக்கெட் தவறான கட்டுரை தொடர்பாக பின்வரும் தெளிவுபடுத்தலை வெளியிட விரும்புகிறது. ‘தென்னாப்பிரிக்கா போட்டிக்கு முன்னர், ஹோட்டலுக்குள் மதுபான விருந்தில் இலங்கை அணி?’ என தலைப்பிடப்பட்டு ஒரு வார இறுதி நாளிதழில் வெளியிடப்பட்டது. ஜூலை 7ஆம் திகதி அந்த செய்தித்தாள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
கட்டுரையின் உள்ளடக்கங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டவட்டமாகவும் வலுவாகவும் மறுக்கிறது என்பதை இங்கே உறுதிப்படுத்துகிறது. புனையப்பட்ட வகையில், பதிவிடப்பட்டுள்ளன என்பதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஐயத்திற்கு இடமின்றி தெரிவிக்கிறது.முற்றிலும் பொய்யான மற்றும்; ஆதாரமற்ற செய்தியே இவ்வாறு பரப்ப்பட்டுள்ளது.
இவ்வாறான பொய்யான அறிக்கைகள் இலங்கை கிரிக்கெட், அதன் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நற்பெயருக்கு நியாயமற்ற முறையில் சேதம் விளைவிப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இந்த பொய்யான குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தை இலங்கை கிரிக்கெட் அந்தந்த நாளிதழிடம்; கோரியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கும் சரிசெய்வதற்கும் பதிலை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளது’ என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.